புதையலின் குறி
பழனி மலை – இன்றைய காலம்
மழை நின்று விட்டது. காற்றில் இயற்கையின் பசுமை வாசனை மேலோங்கியது. அனிருத் மற்றும் அவரது குழு இன்னும் பழனி மலையின் அந்த மர்ம சுனையைச் சுற்றியே ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாமல், குழுவில் ஒருவராக இருந்த நளினி குமாரி, இரகசியமாக ஏதோ செய்கிறாள்.
அவள் ஒரு பக்கமாய்த் திரும்பி, தனது கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறாள்:
"இரண்டாவது கல்வெட்டு கல் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாறு போலவே நவசக்தி யந்திர வடிவம் உள்ளதாம். இரவு 9 மணிக்குள் செயல்பாடிற்கு தயார்."
அவள் கண்கள் கணிக்க முடியாத சலனத்தில் பளிச்சிடுகிறது.
சுமார் 20 அடி ஆழத்தில், பாறை குகையில்…
அனிருத் கைகளில் ஒரு பழமையான கல் தகடையை பிடித்திருக்கிறார். அதில் இருந்த எழுத்துக்கள் அவனுக்கு புதிதல்ல – ஆனால் இதுவரை எங்கும் காணாத வரிசையில் இருந்தன. அவர் மெதுவாக வாசிக்கத் தொடங்கினார்:
"மெய் பொருளைக் கூறும் சிலை –முற்றும் மூடல் அறிந்து விழிக்கும் கண்சுழல்வட்டத்தின் நடுவே எழும் ஒலிஇரண்டாம் வாசலில் மறைந்திருக்கிறது."
அது போகர் எழுதிய இரண்டாவது குறிப்பு என்று அனிருத் நம்பினார்.
அந்த கல்வெட்டின் கீழ் ஒரு பொறியமைப்பு போல தோன்றும் பறை வடிவம் இருந்தது. அதன் மீது சில வரிகள் பிராமி எழுத்தில் பதிக்கப்பட்டிருந்தன:
"நவசக்தியின் இரண்டாம் கோணத்தில்பொறி சுழல்வட்டம் மூடியிருக்கும்.அதைத் திறப்பதற்கு,உணர்வு எதிர்வினை சரியாக இருக்க வேண்டும்."
அது ஒரு "உளவியல் சோதனை" என்று அவர் உணர்ந்தார் – உணர்ச்சிகளை பரிசோதிக்கும் யந்திரம்.
அவருடன் இருந்த ஆராய்ச்சியாளர் ராஜ் கேட்கிறார்:
"இது விஞ்ஞானமா டாக்டர், மாயமா?"
அனிருத் புன்னகையுடன் சொன்னார்:
"இது சித்தர்களின் அறிவியல். நமக்குப் பைத்தியமெனத் தோன்றும் எல்லாமே… அவர்களுக்குப் பரிசோதனைக் கருவிகள்!"
அவர்கள் அந்த கல்வெட்டை நகர்த்தியதன் பின்னர், அதன் கீழே ஒரு வட்ட வடிவ சுழல்வட்டம் தெரிந்தது. அதிலிருந்த ஒலி மெதுவாகக் கேட்கத் தொடங்கியது – மிகவும் மெல்லிய ஓசை:
“மனதின் நடுக்கம் தீரும் பொழுது தான்மறைந்த உண்மை வெளிவரும்…”
இதே நேரத்தில் – நளினி குழுவிலிருந்து வெளியேறுகிறாள்.
அவள் சிலர் காத்திருக்கும் இருட்டான இடத்திற்கு செல்கிறாள். அங்கே ஒரு வாகனத்தில் இருந்து ஒருவர் இறங்குகிறார் – அவர் முகத்தை மூடியிருந்தாலும், அவனது சாயலும் நடையும் ஏறழகனைப் போன்றே இருந்தது.
"அவர்கள் இரண்டாவது தளத்தைத் திறந்துவிட்டார்கள். மூன்றாவது குறி நம் கையில் வந்தால், அவன் சிலை நமக்கே…" என்று அவள் கூறுகிறாள்.
அவர் மெதுவாகச் சிரிக்கிறார்.
"நம் மக்கள் இப்போது இரண்டாம் வாசலுக்கு உள்ளே நுழைவார்கள். ஆனா, அவர்களுக்கு தெரியும் இல்ல, அங்கு தான் புலிப்பாணியின் மாயச் சோதனைகள் தொடங்கும்."
3000 வருடங்களுக்கு முன் – மாயமலை
அது ஒரு உள் பயணம் – யாருடைய மனமும் சுத்தமாக இல்லையெனில், இந்த வாசலுக்குள் நுழைய முடியாது.
புலிப்பாணி வானத்தை நோக்கி உரைக்கிறார்:
"இப்போது உன் முகத்தை மறைத்துவைக்கிறேன்,காலத்தின் கண்கள் திறந்தால் தான் –உன் ஞானம் மீண்டும் பூமியில் ஒளிக்கட்டும்."
தற்போதைய காலம் – இரவு 10.15 மணி
அனிருத் குழு இரண்டாம் வாசலுக்குள் நுழைகிறது. அந்த இடம் ஒரு பாறை மண்டபம் போல உள்ளது. நடுவில் ஒரு சுழல்வட்டம், அதன் மீது நவசக்தி சின்னம். அதைத் தொடும்போது, ஒளி பளிச்சென்று ஒளிர்ந்தது.
அதோடு சோதனை தொடங்குகிறது.
மூன்று நொடிகளில், ஒளியால் உருவான மனதின் பிரதிபலிப்பு உருவம் (a psychic mirror form) உருவாகிறது. அந்த உருவம் ஒவ்வொருவரின் உள்ளதை வாசிக்கத் தொடங்குகிறது. ஒருவருக்கொருவர் பார்வை தவிர்க்கிறார்கள்.
திடீரென ஒருவருக்குள் – குழுவில் உள்ள ராஜ் – மனதில் ஆழமாயிருந்த தன்னுடைய பாசத்தை இழந்த வருத்தம் மேலெழுகிறது. அவன் தவறான உணர்வில் சுழல்கிறான். ஒளி கூர்மையடைகிறது. அவனை சுற்றி அந்த ஒளியால் உருவான வட்டம் மூடுகிறது.
"அவன் உள்ளத்தில் இன்னும் சலனம் இருக்கிறது,"அனிருத் கூறுகிறார். "இவன் இன்னும் இறந்த வருத்தத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறான்…"
இந்த சோதனை உணர்வை வெல்ல முடியாதவர்கள் உள்மண்டலத்திற்கு அடிமையாகி மூழ்கி விடுவார்கள்.
மற்றவர்கள் தொடர முடியாது.
Comments
Post a Comment