இன்ஸ்பெக்டர் அனிதா - கடைசி அழைப்பு 2

 பகுதி 2 – இரவு சாட்சிகள்




மழை மெதுவாக பெய்துக்கொண்டிருந்தது. அடையாறு பாலத்தின் விளக்குகள் நீர்த்த மஞ்சள் நிறமாக சாலையில் விழுந்தன. வழக்கறிஞர் அஜய் விட்டு சென்ற கார், சிதறிய ஆவணங்கள், உடைந்த கைப்பேசி — இவை அனைத்தும் அந்த இரவின் சாட்சிகளாய் அமைந்திருந்தன.

ஆனால் அந்த சாட்சிகளுக்கு உயிர் கொடுத்து உண்மையை சொல்ல வைக்கும் வேலை, இன்ஸ்பெக்டர் அனிதாவுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது.


CCTV வேட்டை

“ரவி, பாலம் சுற்றியிருக்கும் CCTV-களையும், அருகிலிருக்கும் பெட்ரோல் பங்க் கேமராவையும் எல்லாம் சேகரிக்கணும்,” அனிதா உத்தரவிட்டாள்.

“சரி மாம்,” ரவி உடனே ஒரு வாகனத்தில் புறப்பட்டான்.

அனிதா தனது டார்ச் லைட்டால் சுற்றி பார்த்தாள். ஈரமான மணலில் மழைத்துளிகள் விழுந்தாலும், சில தடயங்கள் இன்னும் தெளிவாக இருந்தன. அவள் வளைந்து பார்த்தாள்:

  • SUV டயர் மார்க் இன்னும் தெளிவாக உள்ளது.

  • காலடிச் சுவடுகள் பாலத்திலிருந்து ஆற்றை நோக்கி சென்றிருந்தது.

“அவனை வலுக்கட்டாயமா காரிலிருந்து இழுத்து அழைத்துச்சு… அஜய்யை காப்பாற்ற வாய்ப்பே இல்லாம இருக்கலாம்,” என்று அவள் மனதில் நினைத்துக் கொண்டாள்.


இரவு காவலர்




சற்றுநேரத்தில், அருகில் இருந்த ஒரு தனியார் பாதுகாவலர் ஓடிவந்தார். சுமார் ஐம்பது வயது, வானிலைமையைக் கண்டு மழைக்கோட்டை போர்த்தியிருந்தார்.

“மாம், நான்தான் இங்கிருக்கும் construction site-க்கு watchman. சுமார் 11:30க்கே இங்க சண்டை மாதிரி சத்தம் கேட்டது. நான் வெளியே ஓடிப்பார்த்தேன்.”

“அப்புறம்?”

“அங்கே ஒரு வெள்ளை கார் நின்னது. அந்த இளைஞன் யாரையோ தொலைபேசில பேசிக்கிட்டிருந்தான். அப்புறம் கருப்பு SUV ஒன்று வந்து நின்றது. இரண்டு பேர் இறங்கினாங்க… அவனை கட்டாயப்படுத்தி காருக்குள் தள்ளினாங்க. அவன் கத்தினான். நான் ஓடப்போகுற நேரத்திலேயே, SUV வேகமா போயிருச்சு.”

“SUV எதுவும் number பத்தி கவனிச்சீங்களா?”

“நான் லைட் போடுறதற்குள் காரு போயிட்டுச்சு மாம்… ஆனா கருப்பு நிறம்னு மட்டும் நிச்சயம்.”

அனிதா ஒரு நிமிடம் அமைதியாய் யோசித்தாள்.
“சரி. உங்க கூற்றுக்கேற்ப, சுமார் 11:35–40க்குள்ள அந்த சம்பவம் நடந்திருக்கணும். அதுக்குப்பிறகுதான் அவன் கடைசி கால் பண்ணிருக்கிறான். அதாவது, அவன் எப்படியோ SUV-விலிருந்து தப்பிக்க முயற்சி பண்ணிருக்கான்.”


டீக்கடை சாட்சி


அதே சமயம், அருகே இருந்த டீக்கடைக்காரன் ஒருவர் வந்து சொன்னார்.
“மாம், அந்த இளைஞனை நான் அடிக்கடி பாக்குறேன். Advocate அஜய். சில நேரம் இங்கே வந்து காபி குடிப்பார். நேத்தியும் வந்து ஒரு கப் குடிச்சிட்டு போனார்.”

“அவனோட முகம் எப்படி இருந்துச்சு?”

“அவசரமா இருந்த மாதிரி. யாரையோ தொலைபேசியில் பேசிக்கிட்டிருந்தார். அப்புறம் SUV வந்ததும், அவர் பதறி காருக்குள் போனார் போலிருந்தது.”

“நீங்க SUV டிரைவர் முகம் பாக்கலையா?”

“இல்ல மாம். கார் கண்ணாடி டார்க் ஷீல்டு.”


முதல் குறிகள்



சிறிது நேரத்தில் ரவி திரும்பிவந்தான்.
“மாம், CCTV footage ல நமக்கு SUV வந்ததும் போனதும் தெளிவா கிடைக்குது. ஆனா நம்பர் பிளேட் மாத்திரம் பிளர் ஆயிட்டது. யாரோ திட்டமா camera-வைக் cover பண்ணிருக்காங்க போல.”

அனிதா அந்த வீடியோவை கவனமாக பார்த்தாள்.
11:33 – வெள்ளை கார் நின்று கொண்டிருந்தது.
11:36 – கருப்பு SUV வந்து நின்றது.
இரண்டு பேர் இறங்கினார்கள்.
அவர்கள் அஜயை காரிலிருந்து இழுத்து SUV-க்கு தள்ளினார்கள்.
11:37 – SUV வேகமாக புறப்பட்டுச் சென்றது.

“பாருங்க,” அனிதா சுட்டிக்காட்டினாள், “அவன் போகும்போது கைப்பேசி தரையில் விழுந்தது. அதுவே அவனோட உயிர்க்குரல் ஆன கடைசி அழைப்பு.”


சந்தேக வட்டாரம்


அனிதா தன் டீமுடன் மீண்டும் அலுவலகம் வந்தபோது, காலை 3 மணி. மழை ஓய்ந்திருந்தது.

அவள் மேசையில் சிதறியிருந்த அஜயின் கோப்புகளைத் திரட்டினாள்.
“People vs Suryaprakash – Land Fraud.”
“Illegal Properties – 120 crores Scam.”

அவள் மனதில் மின்னியது:
“சூரியப்ரகாஷ் மாதிரி பெருச்சாமியோட வழக்கை எடுத்துட்டா, அவனுக்கு பகைவர்கள் இல்லாம இருக்க முடியாது. இந்த கடைசி அழைப்பு அவனோட உயிரை மட்டுமில்ல, இன்னொரு பெரிய சதியையும் வெளிச்சம் போடப்போகுது.”


அலிபி விசாரணை ஆரம்பம்




அடுத்த நாளே, அனிதா தனது விசாரணையை ஆரம்பித்தாள்.
முதலில் அஜயின் அலுவலக பங்குதாரர், ராஜீவ்-ஐ அழைத்தாள்.

“அஜய் நேத்தி இரவு எங்கிருந்தார்?”

“மாம், அவன் எப்போவுமே late-ஆ வேலை பண்ணுவான். நேத்தியும் 9 மணிக்கு ஆபீஸ் விட்டு கிளம்பினான். அதுக்கப்புறம் நான் வீடு போயிட்டேன். என்ன நடந்துச்சு?”

அனிதா கூர்ந்து அவன் முகத்தை கவனித்தாள்.
“அவனுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. நீங்க SUV பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க.”

ராஜீவ் கைகளைக் கூட்டினான்.
“எனக்கு தெரியல மாம். நானும் அதே வழக்கில்தான் அவனுடன் வேலை பார்த்தேன். ஆனா அவன் தனியா சில ஆவணங்களைப் பற்றி ரகசியமா வைத்திருந்தான். அதுதான் பிரச்சனையா இருக்கலாம்.”

அனிதா சிரித்தாள்.
“அந்த ஆவணங்கள் இப்போ நம்ம கிட்ட இருக்கு. யாருடைய பெயர் வரப்போகுதோ பார்ப்போம்.”


அனிதாவின் சந்தேகம்


இரவு நேரத்தில் அனிதா மீண்டும் கார் சோதனைக்குச் சென்றாள். அங்கு இன்னும் போலீஸ் தடயக் குழு வேலை செய்துகொண்டிருந்தது.

ஒரு அதிகாரி வந்து சொன்னார்:
“மாம், SUV டயர் மார்க் Michelin Latitude மாதிரி இருக்கு. இந்த மாதிரி SUV Chennaiயில் சிலருக்குத்தான் இருக்கும்.”

அனிதா கண்களில் ஒளி பாய்ந்தது.
“அது நம்மை நேராக குற்றவாளிகளிடம் கொண்டு போகும்.”

அவள் பாலத்தின் இருண்ட நீரை நோக்கி நின்றாள்.
“அஜய் உயிரோட இருக்கிறானா இல்லையா தெரியல… ஆனா அவன் விடுத்து சென்ற கடைசி அழைப்பு நிச்சயம் குற்றவாளிகளை வெளிச்சம் போடப்போகுது.”

Post a Comment

0 Comments

Ad code